TamilSpy

பொழுது போக்கு இணையம்…

நிர்வாணமாக்கி தமிழக மீனவர்கள் சித்ரவதை:இலங்கை கடற்படை அட்டூழியம்

tamilமீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கி நிர்வாணமாக்கி சித்தரவதை செய்த சம்பவம் ராமேஸ்வரத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மாலை 4 மணிக்குமேல் இறால் மீன்பிடிக்க கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்லமுயன்ற மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர் பிளாஸ்டிக் பைப்பினால் தாக்கி அடித்து விரட்டியுள்ளனர்.

மேலும் இரவில் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் சென்ற படகை நிறுத்தி படகில் இருந்த இறால் மீன்களை பறித்துக்கொண்டு மீனவர்களை நிர்வாணப்படுத்தி அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.

மீனவர்கள் வைத்திருந்த மொபைல் போன், டார்ச் லைட் போன்றவைகளை பறித்துக்கொண்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்து அடித்து விரட்டியுள்ளனர்.

இதுபோல் 50க்கும் மேற்பட்ட படகில் மீனவர்களை தாக்கி இறால் மீன்களை பறித்துசென்ற சம்பவம் நடந்துள்ளது. உயிர் பிழைத்தால் போதும் என மீனவர்கள் மீன்பிடிக்காமல் கரை திரும்பியுள்ளனர்.

நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக புலனாய்வு மற்றும் மீன்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*