TamilSpy

பொழுது போக்கு இணையம்…

மயானத்திலிருந்து துர்நாற்றம் வருவதாக பூந்தோட்ட வாசிகள் புகார்

tn_bad-smellராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாம்களில் இறப்பவர்கள் உடல்கள் வவுனியா – பூந்தோட்டம் பொது மயானத்திலேயே அடக்கம் செய்யப்படுகின்றன. அதோடு பொது மருத்துவமனையில் இறப்பவர்களையும் இங்கேயே புதைக்கிறார்கள். ஒழுங்காகப் புதைக்காமல் விடுவதால் அந்த உடல்களிலிருந்து நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். முன்னர் புதைத்த குழிகளிலேயே திரும்பவும் புதைப்பதாலும், மிக அதிக எண்ணிக்கையான உடல்களைப் புதைப்பதாலும் பொதுமக்கள் சுகாதாரத்துக்கு கேடாக அந்தப்பகுதி உள்ளது என புகார் செய்யப்பட்டுள்ளது.

இடம்பெயர் மக்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு பொறுப்பாக உள்ளவர்கள், அவற்றை எரித்து விடக்கூடிய உபகரணங்களை வாங்கித் தருமாறு தமது மேலதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*