TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஒரு நடிகரின் ஈழ அனுபவம்: நடிகர் நந்தா

மௌனம் பேசியதே” படத்தில் அறிமுகமான நடிகர் நந்தா இப்போது இயக்குனர் ஷங்கர் சத்தமில்லாமல் தயாரித்து வரும் “ஈரம்” மற்றும் “ஆனந்த புரத்து வீடு” ஆகிய ஏற்பாடு படங்களில் நடித்து வருகிறார்.

மிகவும் குறிப்பெடுத்துதான் படங்களில் நடித்து வரும் அவர் நடித்த படங்களில் மிக முக்கியமான படம் “ஆணி வேர்”

இந்த படம் ஈழத்தில் உள்ள மக்களின் அவலங்களை தோலுரித்து காட்டும் படங்களில் ஓன்று.இந்தியா,இலங்கை தவிர மற்ற நாடுகளில் இந்த படம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

ஷங்கரின் படங்களில் நடித்த அனுபவங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தவரிடம் ஆணிவேர் படம் பற்றியும், ஈழத்தைப்பற்றியும் சில கேள்விகளை கேட்டேன்.

சக்திவேல்: “ஆணிவேர்” படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

நந்தா: ரொம்பவும் மனம் கஷ்டமாக இருந்தது, அந்தப்படம் வன்னி மற்றும் கிளிநொச்சியில் தான் படமாக்கப்பட்டது, அப்போது ங்கு போர் நடக்க வில்லை. படபிடிப்புக்காக அங்கு இருந்த மக்கள் கொடுத்த ஒத்துழைப்புகளும்,உதவிகளும் என்னால் மறக்கவே முடியாது. தங்களுக்குள் இருக்கும் வறுமையை பெரிய அளவில் வெளிக்காட்டிக்கொள்ளாத மக்கள் அவர்கள்.அவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய பலம அவர்களுடைய “தன்னம்பிக்கை” தான்.

சக்திவேல்: அந்த படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

நந்தா: உலக அளவில் உள்ள தமிழ் மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள்.அந்த படம் திரையிட்ட எல்லா நாடுகளுக்கும் நான் சென்றேன், அங்கு உள்ள மக்களிடம் நான் கலந்து பேசினேன், என் நடிப்பை வெகுவாக பாராட்டினார்கள். குறிப்பாக எங்கள் மக்களின் வாழ்க்கையை காட்டும் படத்தில் நடித்ததற்காக ரொம்பவும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

சக்திவேல்: இந்த கேள்வியை உங்களிடம் கேட்பது தவறில்லை என்று நினைக்கிறேன்…
“விடுதலைப்புலிகளைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன? நாங்கள் இங்கு இந்தியாவில் இருக்கிறோம் நீங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கே சென்று வந்திருக்கிறீர்கள், சொல்லுங்கள் அவர்களைப்பற்றி ?

நந்தா: இது நல்ல கேள்வி, முதலில் விடுதலைப்புலிகள் வேறு, மக்கள் வேறு என்று பிரித்து பார்ப்பதே தவறு. இரண்டு பேரும் ஒருவர்தான். விடுதலைப்புலிகள் தங்கள் மக்களுக்காகவும்,அவர்களுடைய உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள்.அவர்கள் தான் அங்குள்ள மக்களுக்கு பாதுகாவலர்கள்.அவர்கள் இல்லாமல் ஈழம் என்பது சாத்தியமில்லை, அவர்களால் தான் அங்குள்ள மக்களின் வாழ்க்கை மீட்டெடுக்கப்படும், கூடிய சீக்கிரம் விடுதலைப்புலிகள் மூலம் ஈழம் மலரும்.

சக்திவேல்: நீங்கள் அங்கு நடித்துக்கொண்டிருக்கும் போது பழகிய மக்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கிறீர்களா?

நந்தா: இல்லை.காரணம் இப்போது அங்கு நான் பழகிய மக்களில் 80 சதவீதம் பேர் உயிருடன் இல்லை.

அப்படி சொல்லும் போது அவர் முகத்தில் வருத்தமும்,அவர் கண்கள் லேசாக கலங்கி இருந்ததையும் என்னால் காண முடிந்தது.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*