TamilSpy

பொழுது போக்கு இணையம்…

வெலிக்கடை சிறைச்சாலையில் தவிக்கும் தமிழ் கைதிகள் கோரிக்கை

prisonகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகள் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று முதல், சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் அவ்வாறான போராட்டம் எதுவும் இடம்பெறவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், சுமார் 200 பேர் பல வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தம்மை விடுவிக்கவேண்டும் அல்லது குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்யவேண்டும் என உண்ணாவிரதிகள் கோரியுள்ளனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*