TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாழில் கொள்ளைச் சம்பவம் அதிகரிப்பு – கோண்டாவிலில் கணவனும் மனைவியும் கொள்ளையர்களால் படுகொலை

Jaffnaகோண்டாவில் கிழக்கில் நேற்று புதன்கிழமை அதிகாலை கொள்ளையர்களினால் இளம் தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் பெறுமதிமிக்க உடைமைகளும் சூறையாடப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக குடாநாட்டில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் இருவர் படுகொலை செய்யப்பட்டமை மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோண்டாவில் கிழக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிலேயே நேற்று அதிகாலை இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட குடும்பஸ்தரின் தாயார் நேற்றுக் காலை 8 மணிக்கு இவர்களது வீட்டிற்குச் சென்ற போது கணவனும் மனைவியும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட இருவரது தலைகளிலும் பலத்த காயங்களும் சடலங்களுக்கு அருகில் இரத்தக் கறையுடன் அலவாங்கொன்றும் இருந்ததால் இருவரும் அலவாங்கினால் அடித்தே கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் ஞானவைரவர் வீதியைச் சேர்ந்த வீரசிங்கம் சுரேஷ்குமார் (37), அவரது மனைவியான சுபதீபா (26) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் சுரேஷ்குமார் அணிந்திருந்த சங்கிலி மற்றும் மோதிரங்களையும் அவரது மனைவியின் சங்கிலி, காப்பு, தோடுகளான சுமார் 5 பவுண் நகைகளையும் செல்பேசிகளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் கொட்டிக்கிளறிச் சென்றுள்ளதால் வீடு முழுவதும் அனைத்து உடைமைகளும் சிதறிக் கிடந்தன.

கடந்த திங்கட்கிழமை இரவு கொக்குவில் கிழக்கில் வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் உறக்கத்திலிருந்தவர்களுக்கு மயக்க மருந்தை தெளித்துவிட்டு நகைகள், பணம், தொலைபேசிகள் உட்பட பல இலட்சம் ரூபா பொருட்களை சூறையாடிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா இராணுவத்தினரும் அவர்களுடன் இயங்கும் குழுக்களுமே திட்டமிட்ட ரீதியில் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், கொள்ளையர்களை மக்கள் அடையாளம் கண்டபோதும் ஊயிர்அச்சம் ககாரணமாக அவர்களை அடையாளம் காட்டமுடியாமல் இருப்பதாகவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*