TamilSpy

பொழுது போக்கு இணையம்…

அரசியல் ஆதாயத்துக்காக ட்ரோலர் மீன்பிடியை அனுமதிக்கும் டக்ளஸ்

douglasட்ரோலர் மீன்பிடியும், ஆழ்கடல் மீன்பிடியும் யாழ் குடாநாட்டின் மீன்பிடி வளங்களை அழிப்பதால், சூழல் பாதுகாப்புக் கருதி பல எதிர்ப்புகளின் மத்தியில் ட்ரோலர் மீன்பிடிக்கு எதிரான தடை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்திய ட்ரோலர்கள் யாழ் குடாநாட்டுக் கடலில் மீன்பிடிக்க வந்தபோது அவர்களையும் எதிர்த்தனர் யாழ் மீனவர்கள். ஆனால் தமது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும், அந்த தடையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீக்கியுள்ளார் என யாழ் மீன்பிடி சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தென்னிலங்கை மீனவர்கள் குடாநாட்டுக் கடற்பரப்பிற்கு வந்து மீன்பிடிப்பது அதிகரித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை, முனை ஆகிய பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த யாழ் மீனவர்களை தென்னிலங்கை மீனவர்கள் தாக்கியதோடு அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதமாக்கியதாக மேலும் கூறப்படுகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*