TamilSpy

பொழுது போக்கு இணையம்…

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம்

Flagதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி தமிழ்நாட்டு கட்சிகளில் ஒன்றான விடுதலைச் சிறுத்தைகள் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

சென்னை, சென்றல் தொடரூந்து நிலையத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் பல வருடகாலமாக தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்குச சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நூற்றுக்கணக்கானவர்கள் பங்குகொண்டனர்.

“இன்று விடுதலைப் புலிகள் அமைப்பு அந்நாட்டில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த அமைப்பை ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பாகக் கருதுவதில் அர்த்தமிருக்கப்போவதில்லை” எனத் தெரிவித்த திருமாவளவன், “எனவே விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் முழுமையா நீக்க வேண்டும்” எனவும் கோரிக்கைவிடுத்தார்.

“இதேவேளையில் இந்தியாவுக்கு வரும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவில் சம உரிமை வழங்கப்பட வேண்டும்” எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*