TamilSpy

பொழுது போக்கு இணையம்…

உள்நாட்டு விவகாரங்களில் வெளிச் சக்திகளின் தலையீட்டிற்கு அரசாங்கம் வழிவகுத்துக் கொடுத்தள்ளது: ஜே.வி.பி

jvpசர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையினைப் பெற்றுக்கொள்வதற்காக சிறீலங்கா அரசாங்கம் நிபந்தனைகளுக்கு இணங்கி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதனால், உள்நாட்டில் நிதி நிர்வாகம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் அபாயநிலை தோன்றியுள்ளது என்று ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெவித்தார்.

எந்தவொரு நிர்வாகத்திறனும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லாமையால், பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தள்ளார்.

அவசர அவசரமாகக் கடன் தொகையினைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, அதன் பிற்பாடு அரசாங்கம் எதிர்நோக்க வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் சிந்திக்காமல் செயல்பட்டுள்ளது. அரசாங்கம் எடுத்த அவசரமான முடிவுகளினால் இலங்கை மத்திய வங்கியின் செயல்பாடுகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்திகளுக்கு 2 வீத வரி அதிகப்பு மற்றும் அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 5 வீதக் குறைப்பு போன்ற பல்வேறு நிபந்தனைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளதுடன், அதன் விளைவுகள் தொடர்பாக அரசாங்கம் இன்றும் கவனம் செலுத்தாமலே உள்ளது.

அடுத்த வருடத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் மூடப்பட்ட இலங்கைக்கான கிளைக்காயாலயத்தை மீண்டும் இலங்கையில் திறந்ததன் மூலம் உள்நாட்டு விவகாரங்களில் வெளிச் சக்திகளின் அநாவசியத் தலையீட்டிற்கு அரசாங்கம் வழிவகுத்துக் கொடுத்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Ceylon News, News

Your email address will not be published. Required fields are marked *

*