TamilSpy

பொழுது போக்கு இணையம்…

முத்துக்குமாரின் வீர மூச்சு

MuthuKumarநீ வீரத்தமிழ் விதை
எங்களுக்காக
நாங்கள் செய்யாததை
நீ செய்து…

செய் அல்லது செத்துமடி…
என்பதை
செவிப்பறையில் அறைந்து…
சொல்லியிருக்கிறாய்

உறவைக் காப்பாற்ற
உன்னால் முடியுமென
உயிரைச் சுருக்கி
உலகிற்கு உணர்த்தியிருக்கிறாய்…!

அகதியெனும்
அடை மொழியோடு
அலையும் எங்களால்
அழுவதைத் தவிர
வேறென்ன முடியும் – உனக்காக

நாளை
நாங்கள் சுதந்திரக் காற்றை
சுவாசிக்கும் போது – அதில்
நீ…
விட்டுச் சென்ற
மூச்சுக் காற்றும் கலந்திருக்கும்

அப்போதும்
உனை நினைத்து
எம் கண்கள்
கலங்கியிருக்கும்…!

ஈழத்து நண்பர்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: Poems

Your email address will not be published. Required fields are marked *

*