TamilSpy

பொழுது போக்கு இணையம்…

இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க மாட்டோம்: பாகிஸ்தான்

pakistanஇலங்கையின் உள் விவகாரத்தில் தமது நாடு மூக்கை நுழைக்காது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போர் முடிவடைந்த நிலையில், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை விடுவித்து அவர்களை இயல்பு வாழ்க்கை வாழ அனுமதிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசை பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.ஆனால் இலங்கை அரசு அதனை பொருட்படுத்தாமல் உள்ளது.

இந்நிலையில், இலங்கை பத்திரிகையாளர்கள் குழு ஒன்று பாகிஸ்தான் சென்றுள்ளது.அவர்களை இஸ்லாமாபாத்தில் சந்தித்துப் பேசிய பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சக கூடுதல் செயலர் மசூத் காலித், இலங்கையின் உள் விவகாரத்தில் தமது நாடு தலையிடாது என்று கூறினார்.

போருக்குப் பிந்தைய தீர்வு மற்றும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசும், அதன் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான எந்த ஒரு கொள்கையையும் இலங்கையிடம் பாகிஸ்தான் வலியுறுத்தாது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு எது நல்லது என்பதை அதன் தலைமையும்,மக்களுமே சிறப்பாக தீர்மானிக்க முடியும் என்றும் மசூத் காலித் மேலும் தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: News

Your email address will not be published. Required fields are marked *

*