TamilSpy

பொழுது போக்கு இணையம்…

கந்தையா உதயகுமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக கெளரவிக்கப்பட்டுள்ளார்

Naaduகொடிய புற்றுநோய் காரணமாக 22-07-2009 அன்று மீளாத்துயிலடைந்து, எல்லோரையும் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்றுள்ள, தமிழீழம் கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும் தற்போது யேர்மனி சோலிங்கனை வதிவிடமாகவும் கொண்ட திரு கந்தையா உதயகுமார் அவர்கள் நாட்டுப்பற்றாளராக கெளரவிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழத்தில் விடுதலை வேண்டி அல்லலுறும் மக்களின் விடிவிற்காக அயராது பாடுபட்ட இவர், தான் பிறந்து வளர்ந்த மண்ணை என்றும் ஆழமாக நேசித்து, புலம்பெயர்ந்த நாள் தொடக்கம் மரணிக்கும் வரை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு அயராது உழைத்தவர்.

புலத்தில் தமிழீழ தேச நிர்மாணத்திற்கான அனைத்துச் செயறப்பாடுகளிலும் 23 வருடங்களாக ஆற்றியசேவை அளப்பரியது. தமிழீழ விடிவிற்காய் காலநேரம் பாராது அயராது உழைத்த யேர்மனிக் கிளைச் செயற்பாட்டாளரான திரு.கந்தையா உதயகுமார் அவர்களின் இழப்பு என்றுமே ஈடுசெய்ய முடியாதது.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் முழுவீச்சோடு உழைத்த இம்மானத் தமிழனின் கனவை நனவாக்க நாமும் இணைந்து தேசிய விடியல் கனவோடு பாடுபடுவோம் என உறுதியெடுத்துக் கொள்வோம்.

DSC9295Naadupattralar-Uthayakumar

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*