TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது

spyதமிழர்கள் பலர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதை விரும்பவில்லை. மாறாகக் கடன் வழங்கப்பட்டால் அது தமிழரின் தோல்வி எனக் கருதுகின்றனர். ஆனால் நிலைமை தற்போது வேறுவிதமாகத் திரும்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டவுடன், கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டிய இலங்கை மத்திய வங்கியின் செயலாளர் அஜித் நிவாட் இலங்கை பெருவெற்றி அடைந்ததாகக் கூறினார்.

மகிந்த சிந்தனை வெற்றிபெற்றதாகவும், அவரின் அரசியல் நகர்வுகள் சர்வதேசத்திற்கு திருப்தி அளிப்பதால் இந்தக் கடனுதவி கிடைத்ததாகவும் கூறினார் அஜித் நிவாட். ஆனால் நிலமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சில செயல்திட்டங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேரடியாகக் கண்காணிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசு வேறுவழி இன்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மண்டியிட்டு, அவர்களின் இரும்புப் பிடியில் சிக்கி நிற்கிறது என்றுதான் கூறவேண்டும். பின்வரும் பல நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் கடன்தொகை அரசியலுக்கோ, ஆயுதம் வாங்கவோ பயன்படுத்தப்படக் கூடாது,

இலங்கை தற்போது கடன்பெற்றிருக்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய மாதாந்தக் கொடுப்பனவுகளை உடனே மேற்கொள்ளவேண்டும்,

இலங்கை வேறு எந்த நாட்டிடமும் இருந்து 1.7 பில்லியன் டாலருக்குமேல் கடன்தொகையை 20 மாதங்களுக்குள் பெறக்கூடாது.

இலங்கை உடனடியாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்

இலங்கை அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை முழு அளவில் வெளிக்கொண்டுவர வேண்டும்.

மற்றும் இலங்கையில் நடைபெறும் சில வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மேற்பார்வை செய்வர்.

இவ்வாறு பல கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் கடன்தொகையைப் பெற இருக்கின்ற இலங்கை அரசானது சிங்கள மக்களுக்கு இது மகிந்தவுக்கு கிடைத்த ஒரு வெற்றி எனப் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.

காத்திருக்கும் அதிர்ச்சிகள்

இலங்கை அரசின் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி என்பன 5 வீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளது, தற்போது அரசிற்கு கிடைத்துவரும் வரிப்பண வருமானத்தில்(GDP) பாரிய துண்டுவீழ்வதாகக் கூறப்படுகிறது. 2010 மற்றும் 2011 இல் இலங்கை அரசினால் இராணுவச் செலவிற்கு பெரு நிதி ஒதுக்கமுடியாத நிலை தோன்றவுள்ளது. கணிசமான அளவு நிதி துண்டுவீழ்வதால் இலங்கை அரசு (GDP) வரியை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், இனி வரும் ஆண்டில் பொருட்களின் விலை அதிகரிக்கும், ஆதலால் நுகர்வோர் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

இலங்கை அரசானது பலவெளி நாடுகளிடம் இருந்துபெற்ற கடன் தொகைகளுக்கான கட்டுக்காசை மீளச் செலுத்தாமல் உள்ளது. கடந்த 2 வருடமாகச் சீரான முறையில் இந்தக் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாததால், பல நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதை அறிந்த நாணய நிதியம், நிலுவையில் நிற்கும் கொடுப்பனவுகளை முதலில் சீர்செய்யுமாறு இலங்கையை கடுமையாக வற்புறுத்துகிறது.

போர் காரணமாக சுமார் 1,60,000 பேரை இராணுவத்தில் புதிதாகக் இணைத்தது இலங்கை அரசு, இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களின் வருமானமாக கைத்தொழில் இருக்கவில்லை, மாறாக இராணுத்தில் இணைவதையே தொழிலாகக் மேற்கொண்டிருந்தனர். தற்போது யுத்தம் முடிவுற்றதால், இலங்கை அரசு தனது படைபலத்தை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இல்லையேல் இராணுவச் செலவீனங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு பதில்சொல்லவேண்டி இருக்கும். எனவே பல சிங்கள் இளைஞர்கள் வேலை இழந்து வருவாய் இழக்க நேரிடும்.

ஆதலால் அவர்கள் வயலில் இறங்கவேண்டும் என்று நினைக்கிறார் ராஜபக்ச. இதனால் தான், முன்னோடியாக தாம் வயலில் வேலைசெய்வதுபோல ஒரு கப்ஸா அடித்தும் உள்ளார். ஒட்டுமொத்தத்தில் மகிந்தவின் சிந்தனைகள் தலைகீழாக மாறியுள்ளதை சிங்களவர் உணர வெகுகாலம் இல்லை.

rajapaksa-field

Related Posts Plugin for WordPress, Blogger...
  • DumnDumer says:

    Rajapakse”future Job

    July 29, 2009 at 17:59

Your email address will not be published. Required fields are marked *

*