TamilSpy

பொழுது போக்கு இணையம்…

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது

tn_JAFFNA-UNIVERSITY“பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்புவோம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று அறிக்கை ஒன்றை வெளிவிட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களும், தமிழ் அரசியல் கட்சிகளும் என்ன செய்யலாம் என்பது பற்றிய அறிக்கை ஒன்றை, இன்று 28.07.2009 திகதியிட்டு ‘பன்மைத்துவத்தையும் ஜனநாயகத்தையும் கட்டி எழுப்புவோம்’ என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ளது. இதில் முக்கியவிடயமாக வெளி உலகத்திலிருந்து தனிப்படுத்தப்பட்டிருக்கும் வன்னி மக்களின் மீட்பு பற்றியும், இதற்காக அனைத்து தமிழ்க்கட்சிகளும் கூட்டாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக பேசாமல் இருப்பது குறித்து தமது விசனத்தைத் தெரிவித்தும், பன்மைத்துவ ஜனநாயகம் மற்றும் வன்னி மக்கள் தொடர்பில் செய்யவேண்டிய விடயங்கள் பற்றி யாழ் பல்கலைக்கழக ஒன்றியத்தினருடன் கலந்துரையாடலாம் என்றும் அதில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மக்கள் நிலையை உலகுக்கு எடுத்துக் கூறுவதற்கும், மக்கள் நலனில் அக்கறையுள்ள கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் தாம் என்றும் தயார் என்று மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிர்வு வாசகர்களுக்காக மேற்படி அறிக்கையின் ஸ்கான் பிரதியைக் கீழே இணைத்துள்ளோம். ஆனால் இந்த அறிக்கை நூறுவீதமான நம்பகத்தன்மையுள்ளது என்பதை அதிர்வி.cஒம் ஆகிய எம்மால் உறுதிசெய்ய முடியவில்லை என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.
L1

L2

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*