TamilSpy

பொழுது போக்கு இணையம்…

20 நாடுகள் நடத்திய போரால் விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்தித்தார்கள்!

பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் ஈகமறவன் திலீபன் மன்றம் சார்பில் `ஈழத் தமிழரும்- காலக்கடமையும்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ’’எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுத பயிற்சி கொடுக்கும் முகாம் நடப்பதாக ஆங்கில பத்திரிகை ஒன்று புகைப்படத்தை வெளியிட்டது.

இதை அறிந்த இலங்கை அதிபர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். அப்போது எம்.ஜி.ஆர். மூலம் இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார். தமிழகத்தில் முகாம் நடப்பது உண்மை தான், அது விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் அல்ல, அகதிகளின் முகாம் என்று கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த பழைய வரலாறு எல்லாம் சோனியா காந்திக்கும், மன்மோகன்சிங்குக்கும் தெரியுமா? அவர்களுக்கு சுதந்திர போராட்டம் என்றால் என்னவென்று தெரியாது. இந்தியாவும், பல்வேறு நாடுகளும் எப்படி சுதந்திரம் பெற்றது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

ஆயுதம் ஏந்தி போராடிய சுபாஷ் சந்திரபோசையும், பகத்சிங்கையும் தீவிரவாதிகள் என்று வெள்ளையர்கள் கூறினார்கள். ஆனால் அவர்களை நாம் சுதந்திரபோராட்ட வீரர்கள் என்று கூறி பெருமைப்படவில்லையா? அப்படியானால் சொந்த மண்ணுக்காக போராடிய விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா?.

விடுதலைப்புலிகள் சிங்களர்களிடம் தோற்கடிக்கப்படவில்லை. இந்தியா உள்பட 20 நாடுகள் நடத்திய போரால் அவர்கள் பின்னடைவை சந்தித்தார்கள்.

விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வரப்பட்ட 10 கப்பல்களை இந்திய கடற்படை கடலில் மூழ்கடித்தார்கள். ஆயுத தட்டுப்பாடு காரணமாக பின்னடைவை சந்திக்க நேர்ந்தது’’என்று பேசினார்

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*