TamilSpy

பொழுது போக்கு இணையம்…

சமரசத்துக்கு இடமில்லை: ராஜபக்சே

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் விட்டுக் கொடுப்பதற்கோ சமசரம் செய்து கொள்வதற்கோ இடமில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார்.

வாக்குகளைப் பெறுவதற்காக பயங்கரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பதூலாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராஜபக்சே மேற்கண்டவாறு பேசியுள்ளார்.

அவர் மேலு, ‘’ நாங்கள் ஆட்சிக்கு வரும் போது இலங்கையின் ஒரு பகுதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. நமது எம்.பி.க்கள் யாழ்ப்பாணம் செல்ல வேண்டுமென்றால் விடுதலைப் புலிகளுக்கு வரி கொடுக்க வேண்டியிருந்தது.

நாட்டில் இரண்டு அரசுகள் இருந்தன. ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. நமது ராணுவம் புலிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டது’’என்று பேசியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*