TamilSpy

பொழுது போக்கு இணையம்…

தமிழர் தாயகத்தில் இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிப்பு

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என, சிறீலங்கா அரசு இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளது.

இந்தியாவிற்கான சிறீலங்காவின் துணைத் தூதுவர் பி.எம்.அம்சா சென்னையில் நடைபெற்ற வர்த்தகப் பட்டறை ஒன்றில் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு 3 பில்லியன் பெறுமதியான ஏற்றுமதியை இந்தியா சிறீலங்காவிற்கு மேற்கொண்டதன் மூலம், 2000ஆம் ஆண்டு சிறீலங்காவிற்கான ஏற்றுமதியில் 16வது இடத்தில் இருந்த இந்தியா, 4வது இடத்திற்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கு சிறீலங்கா படைகளால் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அங்கும் இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய முடியும் எனவும் அம்சா கூறினார்.

தமிழர் தாயகத்தில் ஏற்கனவே எண்ணைக் குதங்களையும், அனல் மின்னிலையங்களையும் அமைத்துள்ள இந்தியா, 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும், காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையையும் நிருவகிக்க இருப்பதாக, கடந்த மாதம் தகவல் வெளியாகி இருந்தது.

இதேவேளை, வடக்கில் கட்டிடங்களைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் ஒன்று இந்திய நிறுவனம் ஒன்றுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, சிறீலங்காவின் தேச நிர்மான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

Your email address will not be published. Required fields are marked *

*