TamilSpy

பொழுது போக்கு இணையம்…

ஆபாச வலைத்தளங்களை இலங்கை நீதிமன்றம் தடைசெய்துள்ளது

இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் படங்கள், வீடியோக்கள் கொண்டுள்ள சுமார் 12 ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்யும்படி இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுக்காற்று ஆணையத்துக்கு (TRC) இலங்கை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.

இலங்கைப் பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாச வீடியோக்கள் பலவற்றை இந்த தளங்கள் கொண்டிருப்பதாகவும், இலவசமாக அணுகக்கூடியதாக இருப்பதால் அனைவரும் அவற்றைப் பார்க்கிறார்கள் என்றும் போலீசார் முறையிட்டதாலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கொழும்பு குற்றவியல் நீதிபதி நிஷாந்த கப்புராச்சி கூறியுள்ளார். வலைத்தளத்தின் சொந்தக்காரர்கள் இந்தத் தளங்களை 14 நாட்களுக்குள் தடுக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் இவற்றை TRC தடுக்கவேண்டும் என்றும் மேலும் நீதிபதி கேட்டுள்ளார்.

பிரபலமான ரெட் டியுப்.காம்(redtube.com) இணையம் உட்பட சுமார் 12 உள்ளூர் பாலியல் சம்மந்தப்பட்ட இணையங்களை நேற்றுமுதல் இலங்கையின் தொலைத் தொடர்பு நிறுவனம் தடைசெய்தது.

பல வருடங்களாக இயங்கிவந்த இந்த இணையத்தளங்களை இலங்கை அரசு தடைசெய்யவில்லை. பாராமுகமாக இருந்தது. இருப்பினும் தற்போது திடீரென ஏன் இந்த தடை என்று நாம் சற்று துப்புத் துலக்கினால் சில தகவல்கள் வெளிவந்தன. அதில் அதிர்ச்சியான விடையம் என்னவெனில் குறிப்பிடத்தக்க செல்வாக்கில் உள்ள அமைச்சர் ஒருவரின் மகள் பெந்தோட்ட உல்லாச விடுதி ஒன்றில் உல்லாசமாக இருந்த சில வீடியோக் காட்சிகள் சில வெளியாகியுள்ளதாம்.

சும்மா இருப்பார அமைச்சர், காட்டிவிட்டார் தம் வேலையை. இருப்பினும் குறிப்பிட்ட அமைச்சர் தற்போது பல நெருக்கடியில் இருப்பதாக அதிர்வின் கொழும்பு நிருபர் தெரிவித்தார்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Category: News

Your email address will not be published. Required fields are marked *

*