பரிசில் கே.பியின் திட்டத்துக்கு மனோகரன் தலைமை

பரிசில் கே.பியின் திட்டத்துக்கு வேலும்மயிலும் மனோகரன் தலைமை தாங்குகின்றார்.

தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும், அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும்…. »

ஒரு குடைக்குள் வா! உலக தமிழினமே!! – வித்யாசாகர்

நமக்கென மலரப் போகும் ஒரு தேசத்தின் மலர்ச்சியை, தான் அடைந்து விட்ட சுதந்திரத்தை, இத்தனை வருடம் காத்திருந்த ஓர் விடுதலையை காண ‘விடப் போகும் உயிரை கூட இழுத்துப் பிடித்துக் கொண்டு அடிமைகளுக்கு நிகராய் உயிர்ப்பயம் அறுத்துக்கொண்டு வாழும் சொற்ப மக்களுக்காகவாவது ஒன்று கூடுவோம். வாருங்கள் உயர் உலக தமிழினமே!

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு

மேலும்…. »

உறவுக்குக் கைகொடுப்போம் – ஊர் வாழ வழி சமைப்போம்

இலங்கைத் தீவில் போர் முடிவுக்கு வந்து 15 மாதங்கள் ஆகிவிட்டன. போரின் கோரப் பிடியில் சிக்கி தங்களது உறவுகளை இழந்து, உடுத்த உடையுடன் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் உறவுகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, மாற்றுத் தெரிவுகள் எதுவுமற்ற நிலையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் நகர்ந்திருந்தார்கள்.

இதன் பின்னர் இந்த அகதிகள் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற முகாம்களில் வெறும் தரப்பாள் கொட்டில்களின் கீழ் தங்களது காலத்தினைக் கழித்ததும் தற்போது சூனியமாக இருக்கும் இவர்களது சொந்த ஊர்களில் படிப்படியாக மீள்குடியேற்றப்பட்டு வருவதும் நாமறிந்ததே.

மேலும்…. »

தமிழீழம் கனவல்ல… அதை தோற்றுப்போக விடமாட்டோம்

தமிழீழம் கனவல்ல… அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்!.

தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.

மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது.

மேலும்…. »

சாந்தபுரம் மற்றும் வவுனியாவிற்கு சென்ற த.தே.கூ அறிக்கை

29 ஜூலை 2010 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சி. சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சியின் சாந்தபுரம் கிராமத்துக்கு சென்று அங்கு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் அந்தக் கிராமத்தின் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினோம். அதேநாள் சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் செட்டிக்குளம் நலன்புரி முகாமில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்துபுரம் மற்றும் திருமுறுகண்டி கிராமங்களின் மக்களையும் சந்தித்து பேசினோம்.

2010 மே மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளி

மேலும்…. »

நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர்

‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’.

‘உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது. ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே

மேலும்…. »

தமிழீழ மக்கள் எமது தேசிய கொடியை மறக்ககூடாது

“தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது.

அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் – அல்லது பேரம் பேசினால் – தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்”

- இவ்வாறான ஒரு எழுதப்படாத கோட்பாடு

மேலும்…. »

அரசின் போர் குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும்

ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும்: தமிழர் அமைப்புக்கள் கவனம் எடுப்பார்களா?.

முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் சென்ற விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமல்ல நந்திக்கடல் இரட்டைவாய்க்கால் பகுதியில் ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான வே.பாலகுமாரன், யோகரத்தினம் யோகி உட்பட முக்கிய உறுப்பினர்கள் பலரும் இராணுவத்தினரின் தடுப்புக்காவலில் இருந்த வேளையில் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்திரு

மேலும்…. »

கடவுளை நம்பி வள்ளத்தை கைவிட்ட கதையாய் போய்விட்டது

கடவுளை நம்பி வள்ளத்தை கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத்தமிழர் நிலை.

கடவுள் தன்னை எப்படியும் வந்து காப்பாற்றிவிடுவார் என்ற நினைப்பில் அருகில் வந்த படகையும் கைவிட்ட கதையாய் போய்விட்டது ஈழத் தமிழரின் நிலை. எப்படியும் அருகில் இருக்கும் இந்தியா தமிழீழத்தை பெற்றுத்தந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஈழத்தமிழர், இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு நாட்டுடனும்….

……இராஜதந்திர மற்றும் சிநேகபூர்வமான தொடர்பைப் பேணவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். சீனாவுடன் நல்லதொரு தொடர்பை வைத்திருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தமிழர் இன்று சுதந்திர தமிழீழத்தை பெ

மேலும்…. »

இந்திய சினிமாக் குப்பைகளை ஈழத்தமிழர்கள் நிராகரிக்கும் நிலை

“இந்திய சினிமாக் குப்பைகளை” இலங்கைத் தமிழர்கள் “நிராகரிக்கும் நிலைக்கு” வரவேண்டும்…………….?

சமூகம் குறித்துச் சிந்திக்கும் வினைத்திறன் உள்ள ஒவ்வொரு மனிதனையும் இலங்கைத் தேசிய இனப்பிரச்சனை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கின்றது.

தெற்காசியாவின் முக்கியத்துவமற்றதாகக் கருதப்பட்ட ஒரு மூலையில் சாட்சியின்றி நடத்தப்பட மனிதப் படுகொலைகள் எழுபத்தையாயிரம் உயிர்கள் வரை காவு கொண்டிருக்கலாம் என சர்வதேசச் சிக்கல்களுக்கான குழுமம் கருதுகிறது. ஐ.நாவின் அதிகாரி கோடன் வைஸ் இன் கணிப்பில் நாற்பதாயிரமாவது இருக்கலாம்

மேலும்…. »