தலைவர் உயிருடன்…!!

Annaபிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், “அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!” என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

“முப்பது வருடப் போராட்ட காலத்தில் ‘அடுத்து என்ன நடக்கும்?” என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

tank_brigade

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், ‘நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற ‘கரிகாலன்!’

மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

puthu

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.
Charles Anthony

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், ‘நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், ‘மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்’ என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’ என்று நிறுத்தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். “மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்’ என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

Sri Lanka Rebels

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக புஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

Mulli

அந்த உடல்…

ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

Speech

மாவீரர் தினத்தில்… வருவார் !!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி ‘வீரவணக்க’ தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!’ என்கிறார்கள் உறுதி குறையாமல்.

Tags:

Comments (74)

 

  1. நன்றி நல்ல தகவல்

  2. harendran says:

    eangalen eathir parppum athu than.eelathamilar manangalel nov 27 sudar eatruvom

  3. arivalagan says:

    ulaga tamilarkalin tjagam tamil eela thaayagam

  4. eashwar says:

    let him come and take on them…. they have a lot to pay for…

  5. Shawn G says:

    Tamils have alot of pay back to do, wait and watch….

  6. mandapam viswanathan says:

    My News articles of Eelam tamils matter published in NETRIKKAN tamil weekly regurely. Tamils Leader Prabakaran is live .. this is my article contant. Please reproduce my articles.
    I am worked as Reporter in Dinamani Tamil daily. please sent article and photos to my ID. viswanews@gmail.com . my cell No. 9751541780

  7. suresh says:

    we want our homeland

  8. suresh says:

    fight for our freedam, fight for rights

  9. suresh from Burma says:

    yeah we want a nation for our tamils leaded by our leader Prabakaran.I will do duty for forming tamil Ellam .India is a betrayer country.Congres party willl be destroyed by his leader sonia gandhi and her son Rahu gandhi.
    Tamil ellam is the only solution for tamil in Ellam and all over the country.Sonia gandhi is doing the same wrong like his hunsband .So, she will be punished by the god like her husband.

  10. suresh from Burma says:

    Every tamils should know the right story of tamil ellam. And we should spread the rights of our tamils to next generations and our friends .This is seeds of forming tamill Ellam. now many tamil who don’t know more about Tamil ellam . so, we should spread as we can. This is my suggestions to our tamil friends.

  11. P T RAJAH says:

    EVERY TAMILS (ALL TAMILS) BE REDY TOHELP TO GET TAMILELLAM ANNAN PIRABAKARAN WILL BE HELTHY NOT TO VORRY THE STORY HERE ITS SAID TRUTH WE WONT TAMILELLAM BS CANADA

  12. kanthan says:

    உண்மை என்பது அன்பாகும் – பெரும்
    பணிவு என்பது பண்பாகும் – இந்த
    னான்கு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    ……….

    மிருகம் என்பது கள்ளமனம் – உயர்
    தெய்வம் என்பது பிள்ளைமனம் – இந்த
    ஆறு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்…

  13. Paul says:

    Naam ethirpaarpathu ithaiththaan.

  14. subbarayan sabhanayakam says:

    Most of the Tamils all over the world will be immensely happy if Prabhakaran is alive.

  15. anpu says:

    Thaliver Nalan Virumbi as well as Tamilan

  16. selvakumar says:

    இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!

  17. chandrothaya says:

    long live the leader of future eelam . we can forgive the enemy (sinhalese) not the traitors (india)

  18. Antony Jebaraj says:

    வெற்றி நம் வசப்படும்

  19. uthayan says:

    இலட்சிய வேங்கைகள் இறப்பதும் இல்லை! விடுதலைப் புலிகள் வீழ்வதும் இல்லை!!

    வெற்றி நம் வசப்படும்

  20. Suban says:

    When will we be able to see/ hear our beloved leader. I hope for the Novermebr 2010 maveerar naal.
    Long live Thalaivar.
    There is ONE and ONLY thalaivar, that is Pirabakaran.

  21. Kalhandhaiccoe says:

    -உ-/-=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=-/~ #ஆனால், தேசியத் தலைமகன் இருப்பதுக்கான சுவடு எதுவுமே நமக்குப் புலப்படுவதாத் தெரியவில்லையே..??__ ^^அப்படிமட்டும் இருந்துவிட்டால்,..தமிழீழத் தலைமகன் – “தமிழீக”த் தலைவனா மீண்டுவிட்டால்..அன்றி மீள்வது உறுதியென்றாய்விட்டால்..->அதுவே அடுத்த கட்டப் போர்முகத்தின் வாகைசூடும் வெற்றிப் படிக்கல்லாய்த் திகழாநிற்கும் என்பது உறைப்பினும் உறைப்பாம்./.’~^~’.__ “சேரர் கொற்ற”த்தோம்,_^*Wஆவலந் தமிழகக் *கொங்குதேய – நின்று.||-=சிவ**சிவ=-

  22. santan says:

    eelam vellum athai kallam sollum

  23. siva says:

    thanks for your news

  24. Bharathier says:

    Mary Robinson, former Irish President and former UN High Commissioner for Human Rights said:

    “The EU’s suspension of Sri Lanka’s GSP Plus scheme is the right approach, but it’s not enough. Sustained pressure is necessary, not only to protect human rights in Sri Lanka, but to protect the rights of people everywhere. It is not just governments who can help improve the situation – anyone doing business in Sri Lanka or going there on holiday should also try to make choices that will help all its citizens to a more equitable and prosperous future.”

Leave a Reply