Archive for the World News Category
அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே‚
மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்…
மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகி
மேலும்…. »
Tamileelam News, World News
ரெஜிக்கு இன்டர்போல் பிடியாணை, ஐ.நா வளாகத்துக்குள் கிருபாகரனுக்கு கொலை அச்சுறுத்தல் எவரிடம் கேட்பது நீதி?.
தமிழர் புனர் வாழ்வு கழகத்தின் நிறைவேற்று பணிப்பளாராக இருந்த ரெஜியை தற்போது சர்வேதேச காவல் துறையினர் தேடி வருகின்றனர் ..
ஐ.நா வளாகத்திலேயே அண்மையில் தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் சிங்கள பேரினவாத அரசின் கைக் கூலிகளால் அச்சுறுத்தலுக்கும் அவமானகரமான சூழலுக்கும் உள்ளாக்கப் பட்ட சேதி தமிழ் இனத்துக்கே உலக அரங்கில் விடுக்கப்பட்ட மிரட்டலாகும். தமிழர் மனித உரிமைக் கழகத்தின் செயலர் திரு. வி. கிருபாகரன் தமிழ் மக்களின்
மேலும்…. »
Tamileelam News, World News
இலங்கை ராணுவ படைத்தளபதி சரத் பொன்சேகாவிடம், போர் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க அதிகாரி கள் விசாரணை நடத்த உள்ளனர்.
இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் நடந்த சண்டையின் போது, போர் குற்றங்கள் நடந்ததாக சர்வதேச அளவில் புகார் கூறப்படுகிறது.
போரின் கடைசிக் கட்டத்தில் ராணுவம் மற்றும் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து 68 பக்க அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை தயாரித்துள்ளது.
மே 2ம் தேதி முதல் 18ம் தேதி வரை இலங்கையில் நடந்த 170 குற்றங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்து.
சரத்பொன்சேகா தற்போது
மேலும்…. »
Ceylon News, World News
“எங்களை உங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்” என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை இந்தோனேசிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மேலும்…. »
Ceylon News, World News
மூன்று இலட்சம் தமிழ் மக்களை முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ள சிறீலங்கா அரசுக்கு பிரித்தானிய மக்களின் பணம் சென்றடையக் கூடாது என்று ஆளும் தொழிற்கட்சியின் வருடாந்த மாநாட்டில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிபோன் மக்டொனா அம்மையார் வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்:
“Marks & Spencer நிறுவனத்தில் ஒரு உள்ளாடையையோ, Next நிறுவனத்தில் மேலங்கியையோ அடுத்த தடவை நீங்கள் கொள்வனவு செய்யும் பொழுது, அல்லது இந்தியாவின் கடலோரத்தை அண்டியுள்ள அழகிய தீவிற்கு வாழ்நாள் பெறுமதிமிக்க விடுமுறையாக நீங்கள் செல்லும் பொழுது, மூன்று இலட்சம் மக்களை முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள ஒரு அரசாங்கத்திற்கு உங்கள் பணம் சென்றடைய வேண்டும் என்று உண்மையில் நீங்கள் விரும்புகின்றீர்களா?
மேலும்…. »
Ceylon News, World News
வதைமுகாங்களில் வாடும் தமிழ் மக்களை திறந்துவிடக்கோரும் “திறப்புப்போராட்டத்தில் ” அத்திறப்பு பிரித்தானிய வெளியுறவுச் செயலரிடமும் சேர்க்கப்ப்பட்டது.
இலண்டனில் மிச்சம் பகுதிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவோன் மக்டொனால் அம்மையாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரம் ஒன்றில் பிரிதானிய தமிழ் மக்களும் கலந்து கொண்டனர். இவ்வைபவத்தில் பிரதம விருந்தினராகக் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் திரு. டேவிட் மிலிபாண்ட் கலந்து கொண்டார்.
மேலும்…. »
World News
எரித்திரியத் தலைநகர் அஸ்மாராவில் அமைந்திருக்கும் பன்னாட்டு விமான நிலையம் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறை தகவல் பரப்பிவிட்டுள்ளது.
அத்துடன், எரித்திரிய அதிபர் இசையாஸ் அவ்வேர்க்கி அவர்களுடன் மிகவும் நெருக்கமான உறவை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பேணி வந்ததாகவும், கடந்த 2006ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாளன்று கையொப்பமிடப்பட்ட தொலைநகல் ஒன்றை எரித்திரிய அதிபருக்கு தமிழீழ தேசியத் தலைவர் அனுப்பி வைத்ததாகவும் சிறீலங்கா புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்…. »
World News
சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த “ஈழமுரசு” இதழ் தெரிவித்திருக்கின்றது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்…. »
Ceylon News, World News
“சனல் 4″ தொலைக்காட்சியில் சிறீலங்கா இராணுவத்தினர் விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்வது போல் காண்பிக்கப்பட்ட ஒளிப்படக்காட்சி குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையை தெவித்துள்ளது.
நடைபெற்ற சம்பவங்கள் அதிர்ச்சி தருவனவாக உள்ளதோடு, ஆழ்ந்த கவலையைத் தருகின்றன எனவும் இந்த விவகாரம் தொடர்பான எங்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம் என ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்திற்கான அமெரிக்க தூதுவர் சுசான் றைஸ் செய்தியாளர்களிடம் தெவித்தள்ளார்.
மேலும்…. »
World News
பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
செப்டம்பர் 2000-ல் இதழில் பாய்ல் எழுதிய கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.
உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான “அம்னஸ்டி இன்டர் நேஷனலின்” உயர்மட்டக் குழு இயக்குநராக பாய்ல் பணியாற்றியுள்ளார்.
மேலும்…. »
Ceylon News, World News