Archive for the News Category

சுவிஸில் வெளியிடப்பட்டுள்ள தமிழீழ முத்திரைகள்

ஈழத்தமிழர் அவையால் சுவிஸில் வெளியிடப்பட்டுள்ள தமிழீழ முத்திரைகள்.

சுவிஸ் ஈழத்தமிழர் அவையால் தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக சிவந்தனின் நடைபயண இறுதி நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது.

மேலும்…. »

Featured, Tamileelam News

2 Comments

தமிழீழம் கனவல்ல… அதை தோற்றுப்போக விடமாட்டோம்

தமிழீழம் கனவல்ல… அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்!.

தீப்பற்றி எரிந்த காடுகள் போல் தமிழீழ மண் தீய்ந்துபோய் உள்ளது. மண் மட்டுமல்ல, அந்த மக்களது இதயங்களும் கருகித்தான் போயுள்ளது. நாளும் பொழுதுமாக வன்னி மக்கள் இப்போதும் வதைபட்டுக்கொண்டுதான் உள்ளார்கள்.

மீள் குடியேற்றம் என்ற போர்வையில் மீண்டும், மீண்டும் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டுள்ளார்கள். வாழ்வைத் தொலைத்தவர்களும், வாழும் வகையைத் தொலைத்தவர்களும், ஊனமுற்றவர்களுமாக அந்த மண் சோபை இழந்து சோகமாகக் காட்சி தருகின்றது.

மேலும்…. »

Featured, Tamileelam News

No Comments

சாந்தபுரம் மற்றும் வவுனியாவிற்கு சென்ற த.தே.கூ அறிக்கை

29 ஜூலை 2010 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சி. சிறீதரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சியின் சாந்தபுரம் கிராமத்துக்கு சென்று அங்கு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் அந்தக் கிராமத்தின் மக்களை சந்தித்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடினோம். அதேநாள் சுரேஸ் பிறேமச்சந்திரன், ஆ.யு.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் செட்டிக்குளம் நலன்புரி முகாமில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த இந்துபுரம் மற்றும் திருமுறுகண்டி கிராமங்களின் மக்களையும் சந்தித்து பேசினோம்.

2010 மே மாதம் 22, 23, 24 ஆம் திகதிகளி

மேலும்…. »

Tamileelam News

No Comments

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி பெற்றுள்ளார் (ஒலி இணைப்பு)

தமிழீழத்தில் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழர்களை காப்பாற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரி ஈழத்தமிழன் சுப்ரமணியம் பரமேஸ்வரன் லண்டனில் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின்போது அவர் உணவு உட்கொண்டிருந்தார் என்று அந்நாட்டின் பிரபல பத்திரிகைகள் இரண்டு வெளியிட்ட செய்திக்கு எதிரான பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு வெற்றியீட்டியுள்ளது. பிழையான செய்தியை பிரசுரித்த இரண்டு பத்திரிகைகளும் 80 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ஸை பரமேஸ்வரனுக்கு நட்ட ஈடாக வழங்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும்…. »

Tamileelam News

No Comments

லெப். சீலன் (லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி) வீரவணக்க நாள் 15-07

ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். அவரது வீரவணக்க நாள் இன்று ( வீரப்பிறப்பு 11-12-1960 வீரச்சாவு 15-07-1983)

லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடி

மேலும்…. »

Articles, Tamileelam News

No Comments

தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்

ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. உலகப் போராளிகள் ச‌ரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர். தமிழீழத்துக்கான ஈழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் தீரத்தின், தியாகத்தின் அணையாப் பிரகாசம், எல்லாளன் நடவடிக்கை.

இந்த நடவடிக்கையை போர் மிகுந்த சூழலில் திரைப்படமாக எடுத்துள்ளனர் போராளிகள். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில்

மேலும்…. »

Featured, Tamileelam News

No Comments

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தழிழீழ விடுதலைப் புலிகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழ் நாட்டில் நடைபெறும் செம்மொழி மாநாட்டை தாம் ஆதரிப்பதாக விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொ

மேலும்…. »

Featured, Tamileelam News

No Comments

குமுதினிப்படகு கோரப்படுகொலை – 25வது வருட நினைவறா நாள்!!

சிங்கள இனவெறியரசின் கூலிப்படைகளால் கடல்ப் பெருவெளியில் கொன்றொழிக்கப்பட்ட எம் நெடுந்தீவகத்து உடன் பிறப்புகளினை நாம் இழந்து 25 வருடங்களாகின்றன. இலங்கையரசினால் வேண்டுமென்றே மறக்கடிக்கப்பட்டு கிடப்பிலே போடப்பட்டிருக்கும் இக்கோர மரணங்களின் மர்மங்களை உலகம் கண்டும்,கண்டுகொள்ளாததைப் போல்மௌனித்திருக்கிறது.

குமுதினிப்படகின் கொடுமை நடந்து சரியாக 24 ஆண்டுகளுக்குப் பின்னால் அதே மே மாதத்தில் ஒட்டுமொத்த வன்னித் தமிழினமும் பிய்த்தெறியப்பட்டு உயிரோடு எரித்தும், உயிரோடு மண்ணுள் புதைத்தும், எஞ்சியவர்கள் நடைப்பிணங்களாகவும் ஆக்கப்

மேலும்…. »

Featured, Tamileelam News

No Comments

வட்டுவாகலில் கணவரையும் 3 பிள்ளையும் பறிகொடுத்த தாய்

சிறிலங்கா அரசின் கொலை வெறித் தாக்குதலின் கொடுமையினால் குழந்தைகளையும் கணவரையும் மண்ணில் புதைத்து விட்டு விதவை என்னும் முத்திரை குற்றப்பட்டு முல்லைத்தீவின் வட்டுவாகல் ஊடாக வவுனியாவிற்கு வந்த அகதி மக்களின் ஒருத்தி கண்ணீருடன் எழுதிக் கொள்வது.

நானும் கணவரும் மூன்று குழந்தைகளுமாக ஐந்து பேரைக் கொண்ட எனது குடும்பம் கிளிநொச்சியில் மிகவும் சந்தோசமாக வாழ்ந்தோம் அச்சமயம் கிளிநொச்சி நகரில் மக்கள் மீது மேற்கொண்ட தரை ஆகாய வழியான கனரக ஆயுதங்களின் கொடூரத் தாக்குதலுக்கு அஞ்சி 2008ம் ஆண்டு காலப் பகுதியில் மக்கள் அங்கிருந்து இடம்

மேலும்…. »

Featured, Tamileelam News

No Comments

நாடுகடந்தாலும் தமிழீழமே எமது முகவரியாகும்

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரான்சில் இருந்து தேர்வாகிய பிரதிநிகளில் ஒரு தொகுதியினர் மே 13 வியாழக்கிழமை அன்று கருத்துப் பகிர்வொன்றை நிகழ்த்தினர்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முதல் அமர்வு குறித்தும் – எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் மேலும் அனைவரது பங்களிப்போடு நாடு கடந்த தமிழீழ அரசினை பலப்படுத்துவது குறித்துமான தொடர் கருத்துப்பகிர்வுகளின் தொடக்கமாக இச்சந்திப்பு அமையப்பெற்றிருந்தது.

இம்முதல் கருத்துப்பகிர்விற்கு ஒரு தொகுதி பொது அமைப்பு பிரதிநிதிகள் சமூக செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்தான

மேலும்…. »

Tamileelam News

No Comments