Archive for the Cinema Category

“வேட்டைக்காறன்” தமிழன் பார்த்து ரசிப்பானா?

vijay“வேட்டைக்காறன்” சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?: சுவிஸ் இளையோர் பேரவை.

விஜயின் வேட்டைக்காறன் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டி சுவிஸ் தமிழ் இளையோர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது:

தமிழனை வேட்டையாடியவர்களுடன் கொண்டாடி மகிழ்பவர்கள் தயாரிப்பில் வேட்டைக்காறன். சூடு சுறணையின்றித் தமிழன் பார்த்து ரசிப்பானா? பிய்ந்த செருப்பால் அடிப்பானா?

எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய சுவிஸ் வாழ்த் தமிழ் மக்களே!

வருகின்ற 19 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்டைக்காறன்; எனும் திரைப்படம் சுவிஸ் எங்கும் திரையிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

மேலும்…. »

Cinema, Swiss News

10 Comments

சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நாள் வாழ்வு திரைப்படமாக வருகிறது.

hitlerஹிட்லரின் கடைசிநேர முடிவு தற்கொலை அல்ல..
உலக யுத்த கிளைமாக்சின் நேரங்களே கிளைமாகஸ்…

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது சர்வாதிகாரி ஹிட்லர் எவ்வாறு மரணித்தார் என்பது இப்போதும் புதிராகவே இருந்து வருகிறது. இந்த வகையில் கடைசியாக வந்த உன்ராக்கன் என்ற ஜேர்மன் மொழிப்படம் நிலத்தடி அறையில் போரின் கடைசி விநாடிகளில் எத்தகைய உணர்வுகளை பிரதிபலித்தார் என்பதை அழகுபட வெளியிட்டிருந்தது. அப்படத்திற்கு பல சர்வதேச விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன. இப்போது சர்வாதிகாரி ஹிட்லரின் வாழ்க்கையில் இடம் பெற்ற கடைசி நிமிடங்களே மிகமிக சுவாரசியமானவை. இவற்றை விநாடிக்கு விநாடி பரப்பு தரும் வகையில் திரைப்படமாக தயாரிக்க இருக்கிறார் பிரபல கொலிவூட் திரைப்பட இயக்குநர் குவான்ரின் ரறன்ரினோ.

மேலும்…. »

Cinema

No Comments

தலப்பாவு : நக்ஸலிசம் குறித்த மலையாளத் திரைப்படம் : எஸ்.வி.உதயகுமார்

thalapavuதலப்பாவு – மிகவும் பிடித்திருந்தது. லாலின் நடிப்பு குறிப்பிடத் தக்கது. ஒருவிதமான கையறுநிலையைப் படம் முழுவதும் லால் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரோகிணியும். பிருத்விராஜ் பொருத்தமாகத் தெரியவில்லை. என்றாலும் நல்ல நடிப்புதான். குறிப்பாக, குறிப்பிட்ட காட்சிகளில் அவர் தரும் புன்னகை அக்காட்சிகளின் உணர்வுகளுக்கு கனம் சேர்க்கிறது.

திரைக்கதையில் லாலும் ரோகிணியும் பிரிவதற்கான காரணம், குடியும் குடும்ப அக்கறையின்மையுமே என்று கொண்டு சென்றிருந்தால் பரவாயில்லை. போலீஸ்காரர்கள் ரோகிணியிடம் பொய்யுரைத்தபடி, சாராவை நினைத்து ஏங்குவதால் என்று சொல்வது வலுவாய் இல்லை. லாலும் ரோகிணியும் சாரா குறித்து ஏற்கெனவே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும்…. »

Cinema

No Comments

இந்திய திரைப்பட அகடமி விருது விழா: ஷாருக்கான்,ஐஸ்வர்யாராய்,ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது

சீனாவில் உள்ள மகாவு நகரில் பத்தாவது சர்வதேச இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஜோதா அக்பர் படத்துக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளது.

சிறந்த நடிகராக ஹிருத்திக் ரோசன், சிறந்த நடிகையாக பிரியங்கா சோப்ரா, சிறந்த டைரக்டருக்கான விருது அசுதோஸ் கவுரிகர், சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த இசையமைப்பாளர் விருது ஏ.ஆர்.ரகுமான், சிறந்த புதுமுக நடிகைக்கான விருது அசின் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ளது.

மேலும்…. »

Cinema

No Comments

‘இன்றைய தொண்டன் நாளைய தலைவன்…’ கதிகலக்கும் விஜய்!

நடிப்பில் மட்டுமல்ல… அரசியல் பேசுவதிலும் தனக்கு குரு ரஜினிதான் என்று முடிவே செய்துவிட்டார் போலிருக்கிறது விஜய்.

அரசியலில் தனது அடுத்த கட்டம் என்னவென்பதை ஆலோசிக்கவும், ரசிகர்களின் பணிகள் குறித்து பேசவும் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் விஜய். சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான கல்யாண மண்டபங்களில் ஒன்றில்தான் இந்த கூட்டம் நீ…ண்ட நேரம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் விஜய் எடுத்த எடுப்பிலேயே பயன்படுத்திய வசனம்… ஸாரிங்ணா பஞ்ச் வசனம் இது:

‘நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன், இன்றைய தொண்டன் நாளைய தலைவன்… இதை மனதில் வச்சிக்கிட்டு செயல்படணும். உங்களால எனக்கு பெருமை கிடைக்கணும்… என்னால உங்களுக்கு பெருமையும் இருக்கும், எதிர்காலத்துக்கு உத்தராவாதமும் இருக்கும்’ என ஏகத்துக்கும் ஏற்றிவிட, ஐயனார் கோயிலில் மந்திரித்து விட்டவர்கள் மாதிரி முறுக்கோடு வெளியில் வந்தனர் விஜய்யின் ரசிகர்கள்.

எதுக்கு இந்த பில்ட் அப்?

மேலும்…. »

Cinema

No Comments

நவ்யாவின் நிபந்தனையுடன் படமான படுக்கை காட்சி!

பத்திரிகைகளுக்கு படம் தரக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரசிக்கும் சீமானே படத்தின் குளியல் காட்சி மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் நடித்தார் நவ்யா நாயர்.

ஸ்ரீகாந்த்- நவ்யா நாயர் ஜோடியாக நடிக்கும் படம் ரசிக்கும் சீமானே. இந்தப் படத்தை வித்யாதரன் என்பவர் இயக்குகிறார்.

படத்தின் கதைப்படி முரட்டு தாதாவான ஸ்ரீகாந்த் (?!) நவ்யாவின் அழகில் மயங்கி அவரை மிரட்டி அனுபவிக்க முயற்சிப்பார். கிட்டத்தட்ட கற்பழிப்புக்கு சமமான ஒரு படுக்கையறைக் காட்சி அப்போது இடம்பெறும்.

இதற்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ள மறுத்தாராம் நவ்யா. ஆனால் இந்தக் காட்சி இல்லாவிட்டால் கதையே நகராது என இயக்குநர் அடம்பிடிக்க, ‘பத்திரிகைகளுக்கு மட்டும் படத்தைக் கொடுத்துடாதீங்க’ என்ற நிபந்தனையோடு நடித்துக் கொடுத்துள்ளார்.

மேலும்…. »

Cinema

No Comments

நயன், பிரபு மேட்டர் உண்மையா?


நேற்றுத் தெலுங்குப் படவுலகமே பரபரப்பில் இருந்த்து. நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொண்டார்கள் என்பதுதான் பரபரப்புக்கு காரணம். தெலுங்கின் முன்னணி சேனல்களில் பிளாஷ் நியூசாகவே ஓடியது இந்தச் செய்தி. அவ்வளவுதான்… நயன்தாராவின் செல்போனையும், பிரபுதேவா வின் செல்போனையும் விடாமல் துரத்தினார்கள் நிருபர்கள். ஆனால், தொடர்ந்து செல்போன் ஆஃப் ஆகியே இருந்தது.

மேலும்…. »

Cinema

No Comments