Archive for the Ceylon News Category

“விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்கள

“விலைமாதரைக் கொடுத்து” இனப் படுகொலையை மறைக்கும் சிங்களம்: துணைபோகும் இந்தியம்….?.

இண்டர்நேஷனல் இ‌‌ந்திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் வழங்கு விழா வரும் யூன் மாதம் 3, 4, 5ஆம் தேதிகளில் கொழும்புவில் நடைபெறும் என்று கூறி, அதில் பங்கேற்குமாறு இந்திய திரைபடத் துறையினருக்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இண்டர்நேஷனல் இ‌ந்‌திய‌ன் ஃபிலிம் அகாடமி விருதுகள் (International Indian film Academy – IIFA Awards) விழா ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஏதாவது ஒரு நாட்டின் முக்கிய நகரில் மிக விமரிசையாக கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்திய

மேலும்…. »

Ceylon News, Featured, India News

No Comments

சிங்களவர் தமக்குள் மோதும் போர் களமானது கொழும்பு

சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பிலும், சிறிலங்காவின் வேறு பகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் நடத்திய அறவழிப் போராட்டங்களின் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்களும் காவல் துறையினரும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு உயர்நீதிமன்ற வளாகம் அருகே சரத் பொன்சேகாவுக்கு அதரவளிக்கும் எதிர்க் கட்சிகளின் சார்பில் இன்று காலையில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜெனரல் பொன்சேகரின் மனைவி அனோமா பொன்சேகா, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டி

மேலும்…. »

Ceylon News

No Comments

அன்று புலிகள்.. இன்று சரத்.. விமான நிலைய வணக்கங்கள்

அன்று புலிகள்.. இன்று சரத்.. ஜனாதிபதியின் விமான நிலைய வணக்கங்கள் தொடர்கின்றன…

சிங்கள மாத்தயா சரத் பொன்சேகாவின் பிடரியில் அடித்தது இராணுவச் சிப்பாய்.
டாக்டர் பட்டத்துடன் வந்து சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்து மகிழ்ந்தார்..
திருப்பதி வெங்கடாஜலபதியின் மகிமையோ மகிமை..

விடுதலைப்புலிகளுடனான போர் முடிந்துவிட்டது என்ற தகவல் அறிந்ததும் சிரியாவில் இருந்து வந்து இறங்கி விமான நிலைய தரையை முத்தமிட்டு வெற்றி வீரனானார் மகிந்த ராஜபக்ஷ. இப்போது ரஸ்யாவில் இருந்து வந்திறங்கி மறுபடியும் தரையை முத்தமிட்டுள்ளார். இப்போது அவருடைய முன்னாள் தளபதி

மேலும்…. »

Ceylon News

No Comments

பொன்சேகா கைது: ராஜபக்சவைக் கொல்ல முயன்றாராம்

ஜெனரல் சரத் பொன்சேகா கைது:
இலங்கை “இராணுவ வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஒழுக்காற்று” நடவடிக்கை

*
நடந்து முடிந்த சிறிலங்கா குடியரசு அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் தளபதியுமான ஓய்வு பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகா இன்று திடீரெனக் கைது செய்யப்பட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவைக் கொல்வதற்கான இரகசியச் சதியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என படைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க கூறினார். இரகசிய இடம் ஒன்றில் வைத்த அவர் விசாரிக்கப்படுகிறார் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டபோது

மேலும்…. »

Articles, Ceylon News

No Comments

தலைவர் பிரபாகரன் உயிர்வாழ்கிறார்: த டைம்ஸ்

annaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாரன், புலிகளின் நிதி மூலங்கள், ஆயுத கொள்வனவு வழிகள், வங்கிக்கணக்குகள் என்பவற்றின் ஊடாக தொடர்ந்தும் உயிர் வாழ்கிறார் என த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையில் புதிய தீர்வுத்திட்டத்தை விட, புதிய தமிழ் ஆயுதக்குழு ஒன்று வெளிப்படுவது வரவேற்கத்தக்க விடயம் என த டைம்ஸ் சஞ்சிகை செய்தி தெரிவித்துள்ளது.

கடல் மற்றும் தரை மார்க்கமாக விடுதலைப் புலிகள் இராணுவத்தினால் அழிக்கப்பட்டதன் பின்னர், தற்போது ஒரு அதிசயமான மற்றும் விரைவான மீள் பிறப்பை அவர்களின் ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் இரண்டு பிரதான முக்கிய தலைவர்கள் உயிருடன் இருக்கின்றமை தொடர்பிலான தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

மேலும்…. »

Ceylon News

No Comments

சரத்பொன்சேகாவின் பதவி விலகல் கடிதமும், அவர் குறிப்பிட்ட 16 காரணங்களும்!

Sarath Fonsegaபாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி செயலகம்,கொழும்பு 2009 நவம்பர் 12 மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான வேண்டுகோள்

1. தற்போது கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக பணியாற்றும் ஜெனரல் ஜீ.எஸ்.சீ. பொன்சேக்கா ஆர்.டப்ளியூ.பி., ஆர்.எஸ்.பி., வி.எஸ்.வி., யூ.எஸ்.பி, ஆர்.ஈ.டி.எஸ், பி.எஸ்.சி. ஆகிய நான் 1970ம் ஆண்டு பெப்ரவரி 5ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்டதுடன்,

மேலும்…. »

Ceylon News

No Comments

சரத்க்கு கட்சிகள் எதிர்ப்பு: ரணிலை களமிறக்க முடிவு?

fonseka-ranilஅதிபர் தேர்தலில் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழர் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்துள்ள அந்த நாட்டு எதிர்க்கட்சிக் கூட்டணி, தற்போது ரணிலையும் தேர்தலில் களமிறக்க தீர்மானித்துள்ளதாம்.

இலங்கை அதிபர் தேர்தலில் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல சமீபத்தில் பொன்சேகாவும் ராஜினாமா செய்தார்.

மேலும்…. »

Ceylon News

No Comments

பொன்சேகா – மகிந்த கடைசி சந்திப்பு: நடந்தது என்ன?

பொன்சேகா மகிந்தஅரசயலில் தோற்றாலும் பொன்சேகாவை திரும்ப ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று அரச தலைவர் மகிந்த பொன்சேகாவுடனான சந்திப்பின்போது கூறி அனுப்பியுள்ளார் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய சரத் பொன்சேகா கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் கலந்துகொண்டார். நாடு திரும்பிய பின்னர் இந்த கூட்டத்தில்தான் பொன்சேகா முதல் தடவையாக மகிந்தவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு முடிவடைந்த பின்னர், பொன்சேகாவுக்கும் மகிந்தவுக்கும் இடையிலான பிரத்தியேக சந்திப்பு ஒன்று அரச தலைவர் செயலகத்தில் நடைபெற்றது. இருவர் மட்டுமே இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேலும்…. »

Ceylon News

No Comments

தளபதி பதவியில் இருந்து பொன்சேகா விலகல்

பொன்சேகா: Pulikal.netசிறிலங்க அரசின் முப்படை தளபதி பதவியில் இருந்து சரத் பொன்சேகா விலகியுள்ளார்.

இலங்கையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடுவதால், முப்படை தளபதி பதவியில் இருந்து பொன்சேகா விலகியதாக கூறப்படுகிறது.

பொன்சேகாவின் விலகலை அதிபர் ராஜபக்ச ஏற்றுக் கொண்டதாக சிறிலங்க அரசியல் தகவல்களை மேற்கோள்காட்டி பி.பி.சி. இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அதிபர் ராஜபக்சவுக்கும், தளபதி பொன்சேகாவுக்கும் இடையே கடுமையான கருத்து

மேலும்…. »

Ceylon News

No Comments

திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு முயற்சி

தேசியக் கூட்டமைப்பு Pulikal.netதிம்பு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணபது என்ற பொது இணக்கப்பாட்டின் ஊடாக ஐந்து தமிழ்க்கட்சிகள் சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாக தமிழ்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தமிழ்கட்சிகளின் சந்திப்பு நேற்று கொழும்பில் புளொட் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என். ஸ்ரீகாந்தா, பா.அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம்

மேலும்…. »

Ceylon News

No Comments