Archive for the Poems Category

மாவீரர் நாளில் கார்த்திகை பூ எடுத்து வாடா..!

கார்த்திகை பூகார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா…!

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
உங்கள் ‘உயிர்விலைக்கு’ எது இங்கே ஈடாகும்?
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை

மேலும்…. »

Poems, Tamileelam News

No Comments

புத்தன் பூமி – இல்லை…. இது எங்கள் பூமி

lttelogoபுத்தன் பூமி _ இல்லை
இது எங்கள் பூமி.
சித்தன் சொன்னான்
இது எங்கள் பூமி.

மண்ணின் மணம் _ தமிழ்
தாய்ப்பாலின் குணம்.
பெண்ணின் வீரம் _ வரும்
எதிரிக்கு மரணம்.

தாயின் கருப்பை _ செய்தது
பல தியாகம்.
தாய்மண்ணைக் காக்கச் _ சென்றது
பல பாசம்.

பூவின் குணத்தை _ அறிந்தது
தங்கத் தமிழீழம்.
தேசியப் பூவாய்._ ஏற்றது
கார்த்திகைப் பூவை

வாகைப்பூ சூடி _ போருக்கு
அனுப்பிய சரித்திரம்.
மறவர் படைக்கு _ மட்டும்
தான் சொந்தம்.

உங்கள் அபிசேகா

Poems

1 Comment

என்ன கொடுமை இங்கே – தமிழா

vanniஎன்ன கொடுமை இங்கே – தமிழா
ஏன் இந்தக் கொடுமை இங்கே

சொல்லி வைத்துச் சாகவில்லை.
சொந்தம் சுகம் பார்க்கவில்லை.
போற இடத்தில் குடிமனைகள். – அதில்
போகுது எங்கள் உயிர்கள்…..
போகுது எங்கள் உயிர்கள்.

சின்னஞ் சிறு கைக்குழந்தைகள்.
சின்னா பின்னமாய்….. சிதறிய தசைகள்.
முத்து முத்து ஆசைகள்…..
முகவரி தெரியாமல் போகின்றது…..
முகவரி தெரியாமல் போகின்றது.

சொந்த வீடும் இல்லை…..
சொல்ல உறவும் இல்லை.
சோகக்கதை கேட்க…..
யாருக்கும் நேரம் இல்லை – இங்கே
யாருக்கும் நேரம் இல்லை.

இன்று பார்த்த முகங்கள் எல்லாம்…..

மேலும்…. »

Poems

No Comments

கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த…எழுதாத கவிதைகள்..

fl“கண்மணி…கண்மணி…எடி பிள்ள கண்மணி…” வீர மரத்தின் கீழ் இருந்த முருகேசர் பேத்தியை அழைத்தார். “எடி மோனை…சாப்பாட்டுக்கு மணி அடிச்சிட்டு…” மீண்டும் அவரது குரல். கண்மணிக்கு கோபம், அழுகையும் கூட. “எத்தனை தடவை சொல்லுறனான், என்னை கண்மணி எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு டச்சுக்காலப்பெயர். அக்கம்பக்கத்துப் பிள்ளைகள் கேலி செய்யிறதுகள்…” சொல்லியவாறு கிண்ணம் எடுத்தாள். அவள் வாய்மூடவில்லை .

“கண்மணியே…கண்மணியே…சொல்லுவதைக்கேளு…” முன் தறப்பாளுக்குள் இருந்து சிறிரங்கன் பாடினான். “செருப்பு பிய்யும்…” பல்லை நெருமிக்கொண்டு கண்மணி சொன்னாள். “என் கண்மணிக்கு கோபம் வந்தால்…” மேலும் பாட, “பாருங்கோ அம்மா !… அப்புவுக்கு குடுக்கிற ஏச்சில எல்லாம் சரி வரும்…” எடுத்த கிண்ணத்தை கீழே வைத்துவிட்டு “நான் சாப்பாடு வாங்க போகமாட்டன்…” கண்மணி இருந்திட்டாள்.

மேலும்…. »

Poems

1 Comment

முத்துக்குமாரின் வீர மூச்சு

MuthuKumarநீ வீரத்தமிழ் விதை
எங்களுக்காக
நாங்கள் செய்யாததை
நீ செய்து…

செய் அல்லது செத்துமடி…
என்பதை
செவிப்பறையில் அறைந்து…
சொல்லியிருக்கிறாய்

உறவைக் காப்பாற்ற
உன்னால் முடியுமென
உயிரைச் சுருக்கி

மேலும்…. »

Poems

No Comments