Archive for the Articles Category
நிருபமா ராவ் – நமல் ராஜபக்ச – நியுசிலாந்து – அவுஸ்திரேலியா (வெள்ளிவலம்).
கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைத்தீவுக்கு சென்ற இந்தியாவின் வெளியுறவுச்செயலர் நிருபமாராவ்வின் நகர்வுகள் சிறிலங்கா வட்டாரத்தில் சில நெருக்குதல்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு நாட்டின் இறைமை என்பதும் அதன் தனித்துவம் என்பதும் அந்நாடு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதிலும் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு அணுகின்றன என்பதிலும் தான் தங்கியுள்ளது. இதுவே யதார்த்தமானது.
மேலும்…. »
Articles
தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.
அதை எதிர்கொள்ளச் சிங்கள அரசும் அதன் கூட்டாளி நாடுகளும் தயாராகி விட்டன. இது பிரகடனப் படுத்தப்படாத போர் ஆனால் உண்மையான போர்தான். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளை வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சிறிலங்கா அனுப்புகிறது.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆணி
மேலும்…. »
Articles, Featured
ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்.
தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.
ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளி
மேலும்…. »
Articles, Featured
29 ஓகஸ்ட் 2010 வீரகேசரி ஞாயிறு பதிப்பில் முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும்- இன்னாள் “தேசத் துரோகி”யு(?)மான சரத் பொன்சேகாவினால் “அரசியல் கோமாளிகள்” என்று பட்டம் சூட்டப்பட்ட தமிழகத் தலைவர்களுள் ஒருவரும்- கருணாநிதி அவர்களின் சீடருமான ரி.ஆர்.பாலு அவர்கள் அளித் பேட்டி ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்தப் “பெருமகன்” முன்னர் இந்தியா அனுப்பிவைத்த குழுவில் முக்கிய அங்கம் வகித்து, இலங்கையின் “மனிதாபிமானம் மிக்க” செயல்பாடுகளைப் புகழ்ந்து கூறியவர் என்பதையும் தமிழர்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
தமிழர் பிரதேசங்களில் ராணுவக் குடி
மேலும்…. »
Articles
சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது.
அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார்.
மேலும்…. »
Articles, Featured
இந்தியா எதைச் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றதோ அதை கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மூலமாக செயலில் செய்துகொண்டிருக்கின்றது இந்தியாவின் நடுவன் அரசு. இந்தியாவின் றோவின் கைப்பொம்மையாகிவிட்ட கே.பி பரபரப்பான தகவல்களை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்களைப் பற்றிய….
….தகவல்களை தெரிவித்துள்ளதானது அடுத்த வருடம் இடம்பெற இருக்கும் தமிழ்நாட்டின் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றிவாகைசூட உதவுமுகமாகவே தான் இப்படியான தகவலை கே.பி மூலமாக விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாட்டின்
மேலும்…. »
Articles
கே.பியின் பொய்ப் பரப்புரை உண்மையும் பின்னணியும் என்ன? – பழ. நெடுமாறன்.
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனராகவும், நிதிதிரட்டுபவராகவும் இருந்த குமரன் பத்மநாபன் என்ற கே.பி. தற்போது சிங்கள அரசின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவர் சிங்கள அரசிடம் சிக்கினாரா? அல்லது அவரே தன்னை ஒப்புக் கொடுத்தாரா? – என்ற கேள்விகள் உலகத் தமிழர்களின் மத்தியில் இன்றும் உலவிவருகின்றன.
அவர் டி.பி.எஸ். செயராஜ் என்பவருக்கு அளித்த நேர்காணலில் பரபரப்பான சில செய்திகளைக் கூறியிருக்கிறார். இச்செய்தி களின் நம்பகத்தன்மையை ஆராய்வதற்கு முன்பாக புலிகள் இயக்கத்திலிருந்து இவர் வில
மேலும்…. »
Articles
விடுதலை வேண்டிப் போராடிவரும் ஈழத்தமிழ் இனம் ஒரே நேரத்தில் பல தளங்களிலும் பயணம் செய்யவேண்டும் என்று நீண்டகாலமாக சில புத்தி ஜீவிகள் வலியுறுத்தி வருகின்றார்கள்.
உலக அரங்கில் ஒரு பக்கத்திற்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதென்பது எமது போராட்டத்தை பின்தள்ளிவிடவே வழி கோலும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள்
ஒரு தரப்பை அல்லது ஒரு நாட்டை மாத்திரம் நம்பி தமது இருப்பு, நகர்வுகள், எதிர்காலம் போன்றனவற்றை ஒப்படைப்பதைத் தவிர்த்து, பல நாடுகள், பல அமைப்புக்கள், என்று ஈழத் தமிழர் வியூகம் அமைத்தால் எம்மால் ஒரு விடுதலையை நோக்கிப் பயணிக்க முடி
மேலும்…. »
Articles
ஈழத் தமிழர் வாழ்வில் நடந்தது எதுவோ அதனை எண்ணி தொடர்ந்தும் மனதைக் குழப்பாது அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இன்று இருக்கிறோம்.
சொந்தங்களை இழந்து, சொத்துக்களைப் பறிகொடுத்து சோகத்தின் உச்சத்தில் அடுத்த வேளைக் கஞ்சிக்கு என்ன செய்வது என அங்கலாய்த்தவாறு ஈழத்தில் எங்கள் உறவுகளின் உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் எங்கள் சொந்தங்களைக் காப்பதற்கு எதனையாவது செய்யவேண்டும் என்ற உறுதி உங்களிடம் இருப்பது எமக்குத் தெரியும்.
இன்று சீனர்கள், சிங்களவர்கள் இந்தியர்கள் என ஈழ மண் பலராலும் கூறுபோடப்படும் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இலங்கை
மேலும்…. »
Articles
வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.
சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன்
மேலும்…. »
Articles, Featured