Archive for the Featured Category

5ம் கட்ட ஈழப்போர் ஆரம்பம்! புலத்தை நோக்கி நகர்கின்றது!!

தமிழீழத்திற்கான போராட்டம் தொடங்கி விட்டது. அது தமிழர் தாயகத்தில் நடக்கவில்லை. தமிழீழத்திற்கான போர் உலக அரங்கிலே நடக்கின்றது. உலகளவில் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் வாழும் களங்களில் இந்தப் போர் முனைப்புப் பெற்றுள்ளது.

அதை எதிர்கொள்ளச் சிங்கள அரசும் அதன் கூட்டாளி நாடுகளும் தயாராகி விட்டன. இது பிரகடனப் படுத்தப்படாத போர் ஆனால் உண்மையான போர்தான். ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிகளை வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சிறிலங்கா அனுப்புகிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆணி

மேலும்…. »

Articles, Featured

1 Comment

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை: இரா.துரைரத்தினம்

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்.

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள்.

ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் அத்தனையையும் தவிடு பொடியாக்கும் வகையிலேயே இன்று சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் மட்டக்களப்பு பன்குடாவெளி

மேலும்…. »

Articles, Featured

1 Comment

விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு

சமீபத்தில் நியூசிலாந்தில் அரசியல் தஞ்சம்கோரி நிராகரிக்கப்பட்ட மூவரில் இருவர் நாடு கடத்தப்பட்டனர். இருப்பினும் அதில் ஒருவர் அரசின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், துணிச்சலான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அகதி அந்தஸ்து கோரிய நபர், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்திய மாலுமி என்றும், அவரே அதை ஒத்துக்கொள்வதாகவும் அரசு தாக்கல் செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதி இலங்கை அரசு இன அழிப்பில் ஈடுபடும் பட்சத்தில் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும்…. »

Articles, Featured

No Comments

முள்ளிவாய்க்கால் உறங்காத உண்மைகள்: சேரமான்

வன்னிப் போரின் இறுதிக் கணங்களில் நிகழ்ந்தேறிய அவலங்கள் தொடர்பான பல உண்மைகள் முள்ளிவாய்க்காலில் புதைந்து கிடக்கின்ற பொழுதும், இவற்றை அரங்கேற்றி முடித்த சிங்களத்திற்கு உடந்தையாக விளங்கிய பலரது அசிங்க முகங்கள், அண்மைக் காலங்களில் முகமூடி கழன்று முழுமையாக வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சிங்களத்தின் எதிர்ப்புரட்சி நிகழ்ச்சித் திட்டத்தின் நடுநாயகமாக விளங்கும் கே.பி அவர்களை ஒரு சந்தர்ப்பக் கைதியாக வர்ணித்து, பொய்மை என்ற முகத்திரைக்குள் தம்மை மறைத்துக் கொள்வதற்கு கே.பியின் சகபாடிகளான வி.உருத்திரகுமாரன், வே.மனோகரன்

மேலும்…. »

Articles, Featured

2 Comments

ஈழத் தமிழர்கள் ஏன் ஒடுகிறார்கள்?: செண்பகத்தார்

யுத்தம் என்பது வெறும் சொல் மாத்திரமல்ல அது மனிதப் பேரழிவின் தொடர் நிகழ்ச்சியாகும் போர் என்பது மனிதர்களை வாழ்விடங்களில் இருந்து பிடுங்கி வீசும் கொடிய சுழல் காற்று சொந்த பந்தங்களைக் காவு கொள்ளும் சூறாவழி

யுத்தம் நின்றாலும் அதன் அவலங்களும் அலைச்சலும் மீளாத் துயரமும் தலைமுறைகளாகத் துரத்திக் கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் அதன் வேதனையை முற்றாக உணர்ந்தவர்கள் ஈழத் தமிழினத்திற்கு ஏற்பட்ட இந்த மாபெரும் துயரம் உலகின் மனச்சாட்சியைத் தொட்டதாகத் தெரியவில்லை காலம் காலமாக வாழ்ந்த மண்ணில் இருந்து விரட்டப்பட்ட ஈழத் தமிழர்கள் புகலிடம்

மேலும்…. »

Articles, Featured

No Comments

சுவிஸில் வெளியிடப்பட்டுள்ள தமிழீழ முத்திரைகள்

ஈழத்தமிழர் அவையால் சுவிஸில் வெளியிடப்பட்டுள்ள தமிழீழ முத்திரைகள்.

சுவிஸ் ஈழத்தமிழர் அவையால் தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக சிவந்தனின் நடைபயண இறுதி நாளான நேற்று வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது.

மேலும்…. »

Featured, Tamileelam News

2 Comments

குந்த ஒரு குடிநிலம் (வெள்ளிவலம்) – சங்கிலியன்

அண்மையில் சிறிலங்காவின் வணிகசஞ்சிகை ஒன்றின் ஊடாக விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் அவர்களின் நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சிறிலங்கா அரசின் அனுசரணையில் வாழ்ந்துவரும் ஒருவரின் கருத்துக்களுக்கு நாம் அதிகம் கரிசனை கொள்ளதேவையில்லை.

இதனையே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால நிறைவேற்றுநர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்களும் தெரிவித்திருந்தார்.

எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்த சிறையில் இருந்தாலும் குமரன் பத்மநாதன் என்பவரின் கருத்துக்களை உள்வாங்கும்போது அவர் எந்த நிலையில் குறித்த நேர்காணலை வழங்கு

மேலும்…. »

Articles, Featured

No Comments

புலம்பெயர்வாழ்வில் தடுமாறும் தமிழ் இளைஞர்களும் யுவதிகளும்

லண்டனில் ஒரு பையன் கலியாணம் முடிக்க யோசித்தான். ஊரிலிருந்துதான் பொம்பிளையைக் கொண்டுவந்து முடிப்பம் என்று அவனது அண்ணாவும் அண்ணியும் ஆலோசனை சொன்னார்கள். அவனுக்கும் அது நல்லதாகப்பட்டது.

உண்மையில் இங்குள்ள ஆண்கள் ஊரிலிருந்து பெண் பிள்ளைகளை வரவழைத்து திருமணம் முடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் காரணம் ஊரிலிருந்து வருகிற பெண்கள் தங்கள் சொல் பேச்சு கேட்டு இருப்பார்கள் என்று புலம்பெயர் நாடுகளில் உள்ள ஆண் பிள்ளைகள் நினைக்கிறார்கள். அது நடைமுறையிலும் சரியாக இருக்கிறது. இங்கு வளரும்

மேலும்…. »

Articles, Featured

No Comments

தேசியத் தலைவரை ஹெலி மூலம் வெளியேற்ற நினைத்தாராம் கே.பி

மே 18ம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான தமிழ் இணையம் பொங்கு தமிழ். ஈழத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான பொங்கு தமிழ் விழாவின் பெயரை தமது இணையத்தின் பெயராகச்சூட்டி வலம்வரும் இவ் இணையம் தமிழர்களை பொங்கவைக்கவில்லை! மாறாக அதே அடுப்பில் தமிழர்களை வேகவைக்க நினைக்கிறது. பொங்கு தமிழ் நடாத்தும் இணைய அன்பர்களுக்கும், பொங்கு தமிழ் நிகழ்வை நடத்தியவர்களுக்கும் எத் தொடர்பும் இல்லை. இவர்கள் எவரும் அப்பக்கம் தலைவைத்துப் படுத்ததே இல்லை, மழைக்கு அப்பக்கம் ஒதுங்கியவர்களோ அல்லர்.

பிரித்தானியாவில் இருக்கும் ரஞ்சித்,

மேலும்…. »

Articles, Featured

2 Comments

ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள்

ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும்.

1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது.

தமிழின உயிர்கொலை நாள் என்று மட்டக்களப்பு வாழ் மக்களால் வேதனையுடனும், அச்சத்துடனும் நீண்டகாலம் நினைவுகூறப்பட்ட இந்த வாரத்தில் மட்டும் சுமார் 700இற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள்

மேலும்…. »

Articles, Featured

No Comments